Categories: Cinema News latest news

“விஜய்யை என்னால மட்டுந்தான் விமர்சிக்க முடியும்”… பொதுவிழாவில் வாய்விட்டு சிக்கிய பிரபல இசையமைப்பாளர்…

விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே போல் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே நாளில் வெளிவரவுள்ளதால் அஜித்-விஜய் ரசிகர்களிடையே விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் “வாரிசு” படத்தின் படக்குழுவினர் பலரும் பங்குபெற்றனர். அதில் விஜய் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தென்பட்டார்.

Vijay

விஜய்யின் வித்தியாசமான லுக் இணையத்தில் வைரல் ஆனது. ரசிகர்கள் பலரும் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிக மனநிலையில் பல கருத்துக்களையும் பகிர்ந்து வந்தனர்.

இதனிடையே பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “வாரிசு பட விழாவில் விஜய் தனது தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியை கொஞ்சம் நெறிப்படுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது” என தனது கருத்தை பகிர்ந்திருந்தார்.

James Vasanthan

மேலும் அதில் “இவ்வாறு விஜய் தோன்றியது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம், அல்லது அவரது ரசிகர்கள் அப்படி வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும் அவை பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்” எனவும் கூறியிருந்தார்.

ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப்போனார்கள். இதனை தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தனின் அந்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பொது விழாவில் கலந்துகொண்ட ஜேம்ஸ் வசந்தனிடம் பத்திரிக்கையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: ஒரு சினிமாவின் பட்ஜெட்டை தீர்மானிப்பது யார் தெரியுமா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

James Vasanthan

அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன் “அவ்வளவு பெரிய நட்சத்திர நடிகரை இவ்வளவு பொதுவெளியில் தமிழ்நாட்டில் என்னை தவிர வேறு யாரும் எழுதமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவ்வாறு சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம் என் மனசுக்குள் எழுந்ததால்தான் நான் அப்படி எழுதினேன்.

இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகரை நாம் விமர்சித்தால், அவரின் ரசிகர்கள் என் மீது திரும்ப பாயுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. ஒரு மூத்த ஊடகவியலாளராக நான் அவ்வாறு எழுதினேன். எதிர்ப்புகளை குறித்து நான் அஞ்சியது இல்லை” என கூறியுள்ளார்.

Arun Prasad
Published by
Arun Prasad