ஜன்னல் வைத்த பாவாடை கவுனில் ஜன நாயகன் ஹீரோயின்!.. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!..
பாலிவுட்டில் வெளியாக காத்திருக்கும் ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. நடிகர் வருண் தவானின் தந்தை டேவிட் தவான், தனது மகன் வருண் தவானை வைத்து இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் அடுத்த வாரம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர். இருவரும் படத்தில் மட்டுமின்றி புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். மேலும், ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ படத்தில் இடம்பெற்றுள்ள காதல் மற்றும் கவர்ச்சி காட்சிகள் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழில் முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ, ஜன நாயகன் போன்ற படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும் விதத்தில் தோன்றிய பூஜா ஹெக்டே, பாலிவுட்டில் முற்றிலும் மாறுபட்ட கவர்ச்சி தோற்றத்தில் நடித்து வருவது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதன் பாடல்கள், டிரெய்லர் மற்றும் புரமோஷன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தற்போது அவரது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது லேட்டஸ்ட் உடையை பார்த்து என்னம்மா இது டிரெஸ் என்றும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
