தமிழ்நாட்டில் முதல் நாளே அதிக வசூல் செய்தது ஜன நாயகனா? இல்ல ரஜினி, அஜித் படங்களா?

 
Jana Nayagan coolie good bad ugly

கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'தளபதி' விஜய், 'தல' அஜித் ஆகியோரின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படங்களின் முதல் நாள் வசூலை (தமிழ்நாட்டில் மட்டும்) வைத்து யாருக்கு அதிக மாஸ் என்று பார்ப்போம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கூலி' படம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. இது தான் முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.29 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியானது. இது முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.28.50 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படம் நேற்று (ஜூலை 23-ஆம் தேதி) வெளியானது. இது முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

From Around the web