முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்தது ஜன நாயகனா? இல்ல கூலி, விக்ரமா?
Jul 28, 2026, 15:03 IST
'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (தி கோட்) படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள புதிய படம் தான் 'ஜன நாயகன்'. இது இப்போது தமிழ்நாடு CM-ஆக இருக்கும் விஜய்யின் திரையுலக வாழ்வில் கடைசி படம்.
ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. இது பாக்ஸ் ஆபிஸில் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.233.24 கோடி கல்லா கட்டியுள்ளது.
ரஜினியின் 'கூலி' படத்துடன் இதை கம்பேர் பண்ணி பார்க்கையில், அதெல்லாம் முதல் ஐந்தே நாட்களில் உலக அளவில் ரூ.399.41 கோடி வசூல் செய்து, நிறைய வித்தியாசத்தில் அது முன்னிலையில் இருக்கிறது.
அடுத்து கமலின் 'விக்ரம்' படத்துடன் கம்பேர் பண்ணி பார்க்கையில், அது முதல் ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ.220.20 கோடி மட்டுமே வசூல் செய்து, வெறும் 13 கோடி வித்தியாசத்தில் 'ஜன நாயகன்' முன்னிலையில் இருக்கிறது.
