தளபதி கச்சேரி சும்மா களைகட்டுது!.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ வேறலெவல்...
தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட நிலையில் அவரின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் இருக்கும் என கருதப்படுகிறது. அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தலில் முடிவு விஜய்க்கு பாசிட்டிவாக இல்லை எனில் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என சொல்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை.
ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள். விஜயின் கடைசி படமாக இருக்கலாம் என நினைப்பதால் இந்த படம் எப்படியும் பல நூறு கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரிலீசுக்கு முன்பே இப்படம் 260 கோடி வசூலை தொட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரைடு’ பாடலை எழுதிய அறிவு இந்த பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனேகமாக இந்த படத்தில் விஜய் அறிமுகமாகும் தொடக்கப் பாடலாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
‘தங்கமே தளபதி.. அண்ணன் போல யாரு’ என விஜய் ரசிகர்களை கவரும்படி பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வீடியோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
