அஜித்தின் 'குட் பேட் அக்லி' முதல் நாள் வசூலை முறியடித்த விஜய்யின் 'ஜன நாயகன்'!
Jul 24, 2026, 12:09 IST
'தளபதி' விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அந்த படம் :தல' அஜித்தின் முந்தைய படத்தின் வசூலை முறியடித்து விட்டதா? என்று விஜய் ரசிகர்கள் பார்ப்பது உண்டு.
நேற்று விஜய் நடித்துள்ள புதிய படமான 'ஜன நாயகன்' வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படம் தான் 'தளபதி'யின் சினிமா கேரியரில் கடைசி படமாம்.
ஏனெனில், தமிழ்நாடு முதலமைச்சராக பிஸியாக இருக்கும் விஜய், இனிமே படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார். 'KVN புரொடக்ஷன்ஸ்' அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த படத்தின் நேற்றைய வசூல் உலக அளவில் ரூ.78.27 கோடியாம்.
ஆனால், அஜித்தின் முந்தைய படமான 'குட் பேட் அக்லி'-யின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.51.20 கோடி தானாம். இதனால் விஜய்யின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளார்கள்.
