விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-க்கு 'ஜன நாயகன்' இயக்குநர் வைத்த ரெக்வஸ்ட்!
பிரபல நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள புதிய படமான 'ஜன நாயகன்' நாளை (ஜூலை 23-ஆம் தேதி) ரிலீஸாகவுள்ளது. இது தான் விஜய்க்கு நடிகராக கடைசி படமாம்.
விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்லும் டைமில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக வந்திருக்கிறார். இவர் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்தில் சந்தீப் கிஷன் தான் கதாநாயகன்.
இப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி வெளியாகப்போகிறது. தற்போது, 'ஜன நாயகன்' படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் ஜேசன் சஞ்சய் குறித்து பேசுகையில் "நான் சமீபத்துல ஜேசன் சஞ்சய் சாரை மீட் பண்ணி பேசுனேன்.
நிறைய உதவி இயக்குநர்கள் கைல கதையோட சுத்திட்டு இருக்காங்க, நீங்க ப்ளீஸ் நடிங்கன்னு சொன்னேன். ஏன்னா டைரக்ட் பண்றதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. உங்களுக்கும் விருப்பம் இருக்கும். ஆனா, நடிச்சுட்டும், டைரக்ட் பண்ணலாம்ன்னு சொன்னேன்" என்று கூறியுள்ளார்.
