ஆந்திரா & தெலுங்கானாவில் கெத்து காட்டியது விஜய்யின் ஜன நாயகனா? சூர்யாவின் கருப்பா?
தெலுங்கு ஹீரோக்களின் எல்லா படங்களும் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகாது. பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த படங்களுக்கு மட்டும் இது சமீபகாலமாக நடந்து வருகிறது.
ஆனால், ஆந்திரா & தெலுங்கானாவில் டாப் தமிழ் ஹீரோக்களின் படங்கள் எல்லாமே தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகும். 'தளபதி' விஜய் மற்றும் 'The One' சூர்யா ஆகிய இருவருக்குமே அங்கு நல்ல மார்கெட் உள்ளது.
அதேபோல், மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. விஜய் நடித்த 'ஜன நாயகன்' படம் நேற்று முன் தினம் (ஜூலை 23) தான் வெளி வந்தது. கடந்த 2 நாட்களில் ஆந்திரா & தெலுங்கானாவில் மட்டும் ரூ.6.25 கோடி வசூல் செய்துள்ளது.
சூர்யா நடித்த 'கருப்பு' படம் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வெளி வந்தது. இது ஆந்திரா & தெலுங்கானாவில் முதல் 2 நாட்களில் ரூ.7.50 கோடி வசூலித்ததாம். இதன் மூலம் சூர்யா தான் அங்கு கெத்து என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
