Jana nayagan Collection: 5வது நாளில் அடங்கிய வசூல்!.. ஜனநாயகன் கலெக்ஷன் அப்டேட்!..
விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜன நாயகன் திரைப்படம் கடந்த 23ம் தேதி வெளியானது. 2026 ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகவிருந்த்து. ஆனால் அப்போது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாததால் அப்போது வெளியாகவில்லை.
தற்போது ஆறு மாதங்களுக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஜன நாயகன் படத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் முழுக்க முழுக்க ஹீரோயிசம் மற்றும் அதிரடியான சண்டை காட்சிகளை மட்டுமே இந்த படம் கொண்டிருந்தது.
அதோடு படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது, ஏற்கனவே படம் லீக் ஆகி ஒரு கோடிக்கு மேல் பார்த்தது, 3 மணி நேர நீளம் போன்றவற்றால் எழுந்த விமர்சனங்கள் போன்ற காரணங்களால் நான்கு நாட்களுக்கு மேல் படத்திற்கு பெரிய வசூல் இல்லை என சொல்லப்படுகிறது.
படம் வெளியாகிய 5 நாட்களில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.217.48 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும், இந்தியாவில் இந்த படம் ரூ.100 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதுவும் 5வது நாளான நேற்று ரூ.10 கோடி முதல் 11 கோடி வரை மட்டுமே இந்த படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது..
