விஜய் ரசிகர்களுக்காக வெளியானது ராவண மவன்டா பாடல் வீடியோ!
Aug 17, 2026, 19:30 IST
நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்து கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் 'ஜன நாயகன்'. இதை 'சதுரங்க வேட்டை' வினோத் தான் இயக்கினார்.
ஒன்றா, ரெண்டா இப்படம் பல விதமான பிரச்சனைகளை கடந்து தான் வெளியானது. விஜய்யின் கடைசி படமான இதற்கு இப்படி நடந்து விட்டதே என்று ரசிகர்கள் ரொம்ப ஃபீல் பண்ணார்கள்.
படம் முழுமையாக ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. வசூலும் குறைவு தான். அனிருத் இசையில் பாடல்கள் எல்லாமே தரம் தான்.
தற்போது, இந்த படத்தில் இடம்பெற்ற 'ராவண மவன்டா' பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இதனால் விஜய்யின் ஃபேன்ஸ் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளார்கள்.