வேட்டையன் படத்தின் முதல் 3 நாட்களின் வசூலையாவது தாண்டியதா ஜன நாயகன்?
'தளபதி' விஜய் நடிப்பில் உருவான 'ஜன நாயகன்' கடந்த ஜூலை 23-ஆம் தேதி தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படம் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் லீக் ஆகிவிட்டது.
இருப்பினும் விஜய்யின் படம், அதுவும் அவரின் கடைசி படம் என்பதால் திரையரங்கிற்கு சென்று ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.171.84 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'கூலி'-யெல்லாம் முதல் 3 நாட்களிலேயே ரூ.318.16 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியது. ஆனால், ரஜினியின் முந்தைய படமான 'வேட்டையன்' முதல் மூன்று நாட்களில் ரூ.149.84 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
இந்த படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் தான் இயக்கியிருந்தார். 'கூலி' பக்கம் தான் நெருங்க கூட முடியல, அட்லீஸ்ட் 'வேட்டையன்' வசூலையாவது தாண்டிட்டோமே என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
