லீக்கான ஜனநாயகன் படக் காட்சிகள்! வேதனையில் எச்.வினோத் போட்ட பதிவு

 
லீக்கான ஜனநாயகன் படக் காட்சிகள்! வேதனையில் எச்.வினோத் போட்ட பதிவு

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஜனநாயகனும் ஒன்று. அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய்க்கு இது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இந்த படம் இன்னும் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், நேற்று சட்டவிரோதமாக சமூக வலைதளங்களில் கசிந்தது ஒட்டுமொத்த திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே சில சென்சார் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவது எப்போது என்றே தெரியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென 'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லீக்கான ஜனநாயகன் படக் காட்சிகள்! வேதனையில் எச்.வினோத் போட்ட பதிவு

இது தொட்ர்பாக 'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் எச்.வினோத் மிகுந்த வேதனையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே அது கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதைப் பகிராமல் ஆதரவளியுங்கள்" என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

From Around the web