1. Home
  2. Latest News

Jananayagan: விஜய்க்கு கடைசி ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!.. செம எமோஷனல்!...

jananaygan
Jananayagan: விஜய்க்கு கடைசி ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!.. செம எமோஷனல்!...

ஜனநாயகன்

விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட் அடித்து வசூலை அள்ளிய பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது.

எனவே ஜனநாயகன் பக்கா கமர்சியல் மசாலா திரைப்படமாக உருவாகியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

2026 பொங்கலை குறிவைத்து ஜனவரி 9ஆம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.பொதுவாகவே விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என அவர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். பல ஆயிரம் பேர் அந்த விழாவிலும் கலந்து கொள்வார்கள்.

jananayagan

ஆனால் ஜனநாயகன் படத்திற்கு அவர்களுக்கு இந்த சந்தோசம் கிடைக்காது எனத் தெரிகிறது. ஏனெனில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடக்கவில்லை. வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீஸ் ஸ்டேடியத்தில்தான் இந்த விழா நடைபெறவிருக்கிறது.

இதை இந்த படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடெக்சன் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து இது தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. 90களில் விஜய் நடித்து வெளியான பல படங்களின் காட்சிகளோடு மலேசியாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜயை பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.