ஜனநாயகன் ஆடியோ லான்ச்சா இல்ல இசை நிகழ்ச்சியா?!.. ஒரே குழப்பமா இருக்கே!...
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனெனில் விஜய் கலந்துகொள்ளும் கடைசி ஆடியோ லான்ச் இது. அதாவது அவர் அரசியலுக்கு வந்துவிட்டதால் ஜனநாயகன் அவரின் கடைசிப் படமாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே வெளியே அதிகம் பேசாத விஜய் தனது படத்தின் ஆடியோ லான்ச்சில் மட்டும்தான் அதிகமாக பேசுவார். இதற்கு முன் அவரின் படங்கள் தொடர்பான ஆடியோ லான்ச் விழாக்கள் விஜய் ரசிகர்களிடம் கவனம் பெற்றன.
தற்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதாலும் ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதாலும் இந்த படத்தின் இசை வெளி்யீட்டு விழா மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதேநேரம் வழக்கமாக சென்னையில் நடக்கும் ஆடியோ லான்ச் இந்த முறை மலேசியாவில் நடக்கிறது.
கோலாலம்பூரில் உள்ள புக்கில் ஜலீஸ் என்கிற விளையாட்டு மைதானத்தில் இந்த விழா நடைபெறவிருக்கிறது. அதேநேரம் இந்த விழாவில் கலந்துகொள்ள குறிப்பிட்ட தொகை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும். ஒருபக்கம், இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா மற்றும் விஜய் யேசுதாஸ் போன்ற பாடகர்கள் கலந்து கொள்வதாக அறிவிப்புகள் வெளியாகி வருவதால் இது ஆடியோ லான்ச்சா இல்லை இசை நிகழ்ச்சிய என்கிற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
உண்மைய சொல்ல போனால் இது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாதான். அதேநேரம் காலை முதல் மாலை வரை விஜயின் ஹிட் பாடல்களை பாடகர்கள் பாடப் போகிறார்களாம். எனவே இது ஒரு இசை நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. அந்த இசை நிகழ்ச்சிக்கு இடையில் ஜனநாயகன் பாடல்களை வெளியிடப் போகிறார்களாம்.
