பல கோடிக்கு பிஸ்னஸ்!.. பெரிய ரிஸ்க்கில் ஜனநாயகன்!.. வசூல் பண்லனா காலிதான்!...
நடிகர் விஜய் அரசியல்வாதியாக களமிறங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்
. பொதுமக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மாநாடு போடுவது என அவரின் அரசியல் பணிகள் சூடு பிடித்திருக்கிறது.
ஒருபக்கம் அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ஒருபக்கம், இந்த படத்தின் வியாபாரமும் சூடு பிடித்திருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் எப்படியும் இந்த படம் பல நூறு கோடி வசூலிக்கும் என்கிற நம்பிக்கையில் தியேட்டர் உரிமையை விநியோகஸ்தர்ள் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலம் என எல்லா மாநிலங்களின் தியேட்டர் உரிமையை 250 கோடிகளுக்கு மேல் வியாரம் செய்திருக்கிறார்கள்.
அப்படி பார்க்கும்போது இந்த படம் தியேட்டர்கள் மூலமாக 500 கோடி வசூல் செய்தால் மட்டுமே படத்தை வாங்கியவர்களுக்கு போட்ட பணம் வரும். அதற்கு மேல் வரும் வசூல்தான் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
500 கோடிக்கு மேல் வசூல் செய்து படம் லாபம் கொடுத்து விட்டால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லை என்றால் விஜயின் கடைசி படம் நஷ்டம் என்கிற இமேஜ் உருவாகும். அதோடு, விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு மட்டுமல்ல.. ‘படமே தோல்வி.. தேர்தலிலும் தோல்விதான்’ என்று அவரை பிடிக்காதவர்களும், திமுக ஆதரவாளர்களும் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்வார்கள். அப்படி ஒரு பெரிய ரிஸ்க்கில் இருக்கிறது ஜனநாயகன்.
