ஜனநாயகன் Vs சிக்மா!.. அப்பா - மகன் மோதலா?.. ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா?...
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார். அவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலையா நடித்த ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். அதேநேரம் தமிழுக்கு பொருந்துவது போலவும், விஜய்க்கு ஏற்றார் போலவும் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்..
இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் இப்போது வரை வெளியாகவில்லை. தற்போது ஒரு வழியாக விரைவில் தனிக்கை சான்றிதழ் கிடைக்கவிருக்கிறது. எனவே வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகலாம் என பலரும் சொல்கிறார்கள். அதோடு, ஒருவேளை அப்படி 23ம் தேதி படம் வெளியாகவில்லை என்றால் ஜூலை 31ம் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..
இதில் விஷயம் என்னவென்றால் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படமும் ஜூலை 31ம் தேதிதான் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள டிசி படமும் 31ம் தேதிதான் வெளியாகிறது. ஒருவேளை அந்த தேதியில் ஜனநாயகன் ரிலீஸ் என்றால் இந்த இரண்டு படங்களின் ரிலீஸும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
