Jananayagan: ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. செம அப்செட்டில் விஜய் ஃபேன்ஸ்!..

 
Jananayagan: ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. செம அப்செட்டில் விஜய் ஃபேன்ஸ்!..

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் ரிலீஸ் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு படத்தை மறுத்தணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

அதன்பின் தயாரிப்பாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்து, அதன்பின் அதற்கு தடை விதிக்கப்பட்டு, தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, பின்னர் வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கெ வந்து என ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட தயாரிப்பாளர் சமீபத்தில் வழக்கை வாபஸ் பெற்றார். அதோடு மறு தணிக்கைக்கும் அவர் விண்ணப்பித்தார். எனவே எல்லாம் சரியாக நடந்தால் இந்த மாதம் 19 அல்லது 20-ம் தேதியில் ஜனநாயகன் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். தயாரிப்பாளரும் அந்த தேதியை திட்டமிட்டார்.

ஆனால் இப்போது வரை படம் மறுத்தணிக்கு செய்யப்படவில்லை. எப்போது படம் பார்க்கிறோம் எனவும் தணிக்கை அதிகாரிகள் சொல்லவில்லை. எனவே கண்டிப்பாக 19, 20 தேதியில் படம் வெளியாக வாய்ப்பில்லை. ஒன்று இந்த படம் வருகிற 27ம் தேதி வெளியாக வேண்டும்.. இல்லையென்றால் ஜூன் மாதம்தான் வெளியாகும் என்கிறார்கள்..

ஏனெனில் மார்ச் மாதம் பள்ளிகளில் தேர்வு நடைபெறும்.. ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.. மே மாசம் தேர்தல் முடிவு வந்துவிடும்.. விஜயை சந்தோஷப்படுத்தக்கூடிய ரிசல்ட் தேர்தலில் அமைந்தால் ஜனநாயகன் மே மாதத்தில் வெளியாகும். இல்லையெனில் ஜூன் மாதமே இந்த படம் வெளியாகும் என்கிறார்கள்.

From Around the web