‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்.. அடுத்த ஜர்க்கா?
விஜய் நடிப்பில் அடுத்து ரிலீஸாக காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படம் தான் விஜயின் கடைசிப் படம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இது தெலுங்கி பாலகிருஷ்ணன் நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக தயாராகியிருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். இப்போது விஜய் ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாறியிருப்பதால் அரசியல் சார்ந்த அம்சங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேர்தல் பரப்புரைக்காக ஒவ்வொரு ஊர்களுக்கு சென்ற போது நேரடியாகவே ஆளும் கட்சியை தாக்கி பேசி வருகிறார். அதனால் படத்திலும் நிச்சயமாக அப்படிப்பட்ட வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக விஜய்க்கு எதிராக அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் கரூரில் அந்த துயர சம்பவம் நடந்த பிறகு இன்னும் அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அரசியல்வாதி என்பதையும் தாண்டி ஒரு டாப் நடிகர் என்ற முறையில் அவருக்கு கூட்டம் கூடி வருகின்றது. இன்னும் எதிர்காலத்தில் கரூர் சம்பவம் போன்று ஏதும் நடந்துவிடக் கூடாது என விஜய் மட்டுமில்லாமல் மற்ற அரசியல் கட்சிகளும் சுதாரிப்புடன் தான் இருப்பார்கள்.
இதற்கிடையில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அந்தப் படத்தின் முதல் பாடல் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஜன நாயகன் படத்தில் அனிருத் இசையமைத்திருக்கிறார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகும் வருவதற்கு முன்பும் மக்களுக்கு கருத்து சொல்லும் வகையில்தான் அவருடைய படத்தில் பாடல்கள் இருக்கும்.
அந்த வகையில் விஜயின் ஜனநாயகன் படத்தின் பாடலும் இருக்குமா என்றும் எதிர்பார்த்திருக்கின்றனர். முதல் பாடல் என்பதால் கோடம்பாக்கத்திலும் சரி அரசியல் களத்திலும் சரி எதை பற்றி இருக்கும்? யாரை தாக்கி அந்த பாடல் இருக்க போதோ என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
