Jananayagan: 4 நாளில் காலியான பாக்ஸ் ஆபிஸ்!.. ஜனநாயகன் வசூல் இவ்ளோதானா?!..

 
jananayagan

தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் நடிகர் விஜய் நடித்து உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ம் தேதி உலகமெங்கும் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாகவிருந்து அப்போது தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

ஆறு மாதங்களுக்கு பின் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டு தற்போது படம் வெளியாகியிருக்கிறது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோட் செய்து பார்த்து விட்டதாக போலீசாரால் சொல்லப்பட்டது.

அதோடு படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால் பல மல்டிபிளக்ஸ் மால் தியேட்டர்களில் இந்த படத்திற்கு 18 வயதில் கீழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இது வசூலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் ஆந்திராவில் இது ஏற்கனவே வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பதால் அங்கும் படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. அதேபோல கேரளா, கர்நாடகாவில் முதல் நாளை தவிர அடுத்த நாளில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை.

இந்நிலையில்தான் ஜனநாயகன் திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.127 கோடிகள் மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் ரூ.217 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. இது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தின் வசூலை விடவும் மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது.

எப்படி பார்த்தாலும் ஜனநாயகன் திரைப்படம் தயாரிப்பாளருக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் ஓரளவுக்கு வசூல் அதிகரித்தாலும் திங்கட்கிழமையான இன்று தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் பெரிதாக ரசிகர்கள் வரவில்லை என சொல்லப்படுகிறது.

Tags

From Around the web