6 மாசம் வெயிட்டிங் ஓவர்!.. ஜனநாயகனுக்கு சென்சார் சட்டிபிகேட் வந்துடுச்சி!.. ரிலீஸ் எப்போ?..

 
jananayagan


விஜய் நடித்து உருவான ஜனநாயகன் திரைப்படம் இந்த வருடம் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் அப்போது வெளியாகவில்லை. எனவே, தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எதுவும் நடக்காததால் வழக்கை வாபஸ் பெற்று மறுத்தணிகைக்கும் விண்ணப்பித்தார்.

அது நடந்து 4 மாதங்களாகியும் தற்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான், தற்போது ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 மணி நேரம் நீளம் கொண்ட இந்த படத்திற்கு 13 இடங்களில் மாற்றங்களை செய்ய சொல்லி தணிக்கை வாரியம் சொல்ல படக்குழுவும் அதை செய்து கொடுக்க தற்போது ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழை வழங்கியிருக்கிறது.

censro

இதையடுத்து வருகிற 23ம் தேதி ஜனநாயகன் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகலாம் என செய்திகள் வெளியாகி வருகிறது. விரைவில் கே.வி.என் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைத்து படம் எப்போது வரும்.. தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. எனவே ஜனநாயகன் படத்தை கொண்டாட அவர்கள் இப்போது முதலே தயாராகிவிட்டனர்.

Tags

From Around the web