ஜனநாயகன் படத்தை லீக் செய்த ஃப்ரீலான்ஸ் எடிட்டர் அதிரடி கைது

 
ஜனநாயகன் படத்தை லீக் செய்த ஃப்ரீலான்ஸ் எடிட்டர் அதிரடி கைது

விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜன நாயகன் கடந்த சில நாட்களூக்கு முன் இணையத்தில் வெளியானது. இது அப்படகுழ்வை மட்டுமல்லாமல் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாகியது. ரஜினி ,கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இதற்கு கண்டனத்தை தெரிவித்தனர். இதயடுத்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் திரைத்துறையிலேயே வேறொரு திரைப்படத்தில் ஃபிரீலான்ஸ் உதவி எடிட்டராக பணியாற்றி வந்தவர் என்பது அம்பலமாகியுள்ளது. .

கைது செய்யப்பட்ட அந்த உதவி எடிட்டர், சம்பந்தப்பட்ட எடிட்டிங் ஸ்டூடியோவிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு ஜனநாயகன்' திரைப்படத்தின் முழு பிரதியையும் ரகசியமாக எடுத்துள்ளார். திருடிய அந்தத் திரைப்பட பிரதியை அவர் தனது கூட்டாளியான மற்றொரு குற்றவாளியிடம் பகிர்ந்துள்ளார். அதன் பின்னரே, ப் படம் டெலிகிராம், பைரசி இணையதளங்கள் என ஆன்லைனில் பரவலாக கசியவிடப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே 6 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags

From Around the web