ஜனநாயகன் படத்தால் சூர்யாவுக்கு வந்த சிக்கல்!.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!...
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒரு வழியாக தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டது.. படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருந்தால் இந்த படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்கிறது. விஜய் நடித்த படங்களிலேயே முதல்முறையாக A சான்றிதழ் கொடுக்கப்பட்ட திரைப்படம் ஜனநாயகன்தான் என சொல்லப்படுகிறது. மொத்தம் 13 இடங்களில் கட் செய்யப்பட்டு இந்த படத்திற்கு சான்றிதழை கொடுத்திருக்கிறது தணிக்கை வாரியம். எனவே 6 மாத காலமாக ஜனநாயகன் படத்திற்கு நீடித்து வந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது..
இதையடுத்து படத்தை எப்போது வெளியிடுவது என்கிற முடிவை எடுக்கும் நிலையில் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. அநேகமாக வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகலாம் என பலரும் சொல்கிறார்கள். ஒருவேளை 23ம் தேதி வெளியாகவில்லை என்றால் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 13ம் தேதி இந்த படம் வெளியாகும் என சிலர் சொல்கிறார்கள்..
இதில் என்ன பிரச்சனை என்றால் லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் என அவர்கள் ஏற்கனவே அறிவித்து விட்டனர். எனவே அவர்கள் ரிலீஸ் தேதியை மாற்ற வாய்ப்பில்லை. ஒருவேளை அதே தேதியில் ஜனநாயகன் படம் ரிலீஸ் என முடிவானால் சூர்யாவின் படமும் விஜயின் ஜனநாயகன் திரைப்படமும் மோதும் என கணிக்கப்படுகிறது.
விஜய் படத்தோடு எந்த நடிகரின் படமாவது வெளியானால் அந்த படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள். அதோடு, அந்த படத்தில் நடித்துள்ள நடிகரை தனிப்பட்ட முறையில் தாக்கி சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார்கள். சூர்யா இதை எப்படி சமாளிக்கப்போகிறார் என தெரியவில்லை.
