Jananayagan: ரிலீஸுக்கு முன்பே கோடிகளை அள்ளிடுச்சே!.. ஜனநாயகன் ப்ரீ பிஸ்னஸ் அப்டேட்!...
தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கி தற்போது வரை பல திரைப்படங்களிலும் இவர் நடித்து விட்டார். விஜய் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. துவக்கத்தில் அவருக்கு சரியான வெற்றிப் படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்து எல்லோருக்கும் பிடித்த நடிகராக மாறினார். இவருக்கு என்ன பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கும் வந்துவிட்டார். கோட் படத்திற்கு பின் அவர் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தெலுங்கில் பாலையா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் உருவாகி இருக்கிறது.
எனவே அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு பக்கா மசாலா படமாக ஜனநாயகன் வெளிவரும் என நம்பப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ப்ரீ பிஸ்னஸ் என சொல்லப்படும் ரிலீசுக்கு முன்பான வியாபாரத்தில் ஜனநாயகன் பல கோடிகளை கல்லா கட்டியிருக்கிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 110 கோடிக்கு வாங்கி இருக்கிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளா என இரண்டு மாநிலங்களின் தியேட்டர் உரிமைகளை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் 115 கோடிக்கு வாங்கி இருக்கிறார். ஒருபக்கம் இப்படத்தின் ஆடியோ உரிமையை T- series நிறுவனத்தால் 35 கோடிக்கு வாங்கியிருக்கிறது. அதாவது, ரிலீசுக்கு முன்பே இப்படம் 260 கோடியை கல்லா கட்டியிருக்கிறது.
இதுபோக சேட்டிலைட் உரிமை மற்றும் தமிழ்நாடு, இந்தியா மற்றும் ஓவர்சீஸ் மூலம் தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டால் படத்தின் வியாபாரம் எப்படியும் 700 கோடிக்கு மேல் செல்லும் என திரையுலக வட்டாரம் எதிர்பார்க்கிறது.
