Jananayagan: அதே டெய்லர்.. அதே வாடகை!.. பாலையாவை காப்பி அடிக்கும் விஜய்!..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் இது. அதோடு விஜய் தீவிர அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது.
இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானபோதே தெலுங்கில் பாலையா என ரசிகர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு இதை எங்கேயும் உறுதி செய்யவில்லை.
அதேநேரம் இயக்குனர் ஹெச்.வினோத் என்பதால் அவர் பகவந்த் கேசரி படத்தை அப்படியே எடுக்காமல் பல காட்சிகளை மாற்றியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த பின்க் படத்தை தமிழில் அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ என எடுத்தபோது திரைக்கதையில் பல மாற்றங்களை செய்திருந்தார் வினோத். எனவே அதுபோல ஜனநாயகன் படத்திலும் அவர் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்திருப்பார் என பலரும் நம்பினார்கள்.
ஆனால் சமீபத்தில் வெளியான செய்திகளின்படி படத்தின் கதை திரைக்கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பகவந்த் கேசரி படத்தின் 90 சதவீத காட்சிகளை அப்படியே எடுத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியானது. அதேநேரம், விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான சில காட்சிகளை மட்டும் அவர் சேர்த்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான தளபதி கச்சேரி பாடல் லிரிக் வீடியோ வெளியானது. சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்?.. அலசி ஆராய்ந்து பகவந்த் கேசரி படத்தின் பாடல் காட்சியில் வரும் அதே போன்ற நடனத்தை ஜனநாயகனில் விஜய், பூஜா ஹேக்டே, மமித பைஜூவை வைத்து அப்படியே காப்பி அடித்து எடுத்துள்ளனர் என பேசத் துவங்கி விட்டனர்.
