கிரீஷ் டப்பாவ எப்படி உதச்சீங்க… ப்ரைமை வச்சு செய்யும் ஜனநாயகன் டீம்!
தமிழக முதல்வர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமை தான் தற்போதைய கோலிவுட்டின் பெரிய காமெடி ஷோவாக மாறி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தவர் விஜய். 300 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வந்த விஜய் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தினை துவக்கினார். அரசியலில் களமிறங்க இருப்பதால் சினிமாவில் இருந்து விலகினார்.
அவருடைய கடைசி படமான ஜனநாயகனை முடித்த கையோடு அரசியலில் தன்னுடைய கவனத்தை திருப்பினார். பரபரப்பாக பிரச்சாரத்தில் களமிறங்கியது தமிழக வெற்றிக்கழகம். தனி ஆளாக களமிறங்கி வெற்றியும் பெற்றனர்.
இருந்து ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை பெற்று இன்று நம்பிக்கை தீர்மானத்திலும் வெற்றி பெற்று முதல்வராகி விட்டார். ஆனால் பிரச்சாரத்தின் போது ஜனநாயகன் முழு படமாக கசிந்தது.
இதனால் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியது. இந்த கசிவு விவகாரத்தால் போட்ட டீலை கேன்சல் செய்துவிட்டது. வெறும் 50 கோடிக்கு வேண்டும் என்றால் வாங்குவதாக ஜீ 5 முன் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதால் தற்போது ஜனநாயகனை வாங்கி போட்டி நடந்து வருகிறதாம். அமேசான் நிறுவனம் முன்பு போட்ட தொகையை விட பெரிய தொகைக்கு வாங்க போட்டி போடுகிறது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாத இறுதியில் ஜனநாயகன் ரிலீஸ் செய்யப்படும் என்பதால் ஓடிடி உரிமம் குறித்த பேச்சுவார்த்தை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
