எம்ஜிஆருக்குப் பிறகு விஜய் செய்த மகத்தான சாதனை.... ஜனநாயகன் தனித்துவங்கள்!

 
mgr, vijay

சென்சார் பிரச்சனை, இணைய லீக் என பல்வேறு சவால்களைக் கடந்து ஜனநாயகன் படம் நாளை (23.7.2026) வெளியாகிறது. இது ஒரு புதிய படம் என்பது மட்டும் பெரிய எதிர்பார்ப்பு அல்ல. தமிழ் சினிமா, தமிழக அரசியல், தமிழ் ரசிகர்கள் என மூன்றையும் ஒரே நேரத்தில் இணைக்கக்கூடிய படம் இது என்றும் சொல்லலாம். ஜனநாயகன் படம் தனித்துவமானது. விஜய் கடைசியாக ஹீரோவாக நடிக்கும் படம். 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இது அவரது 69வது படம். சுமார் 34 ஆண்டுகள் திரையுலகப் பயணத்தில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் விஜய். 44 இயக்குனர்கள் விஜயை வைத்துப் படம் இயக்கி இருக்கிறார்கள். தமிழக வெற்றிக்கழகத்தைத் தொடங்கிய பிறகு அரசியல்ல முழுநேரமாக கவனம் செலுத்துவேன். இதன்பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படம். இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு. அந்தப் பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்கள். 1977ல் எம்ஜிஆர் முதல் அமைச்சர் ஆன பிறகு அவரது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வெளியானது.

அதன்பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல்வராக உள்ள விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகிறது. மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் சி.ஜோசப் விஜய் என்ற அடைமொழி போடப்பட்டு இருப்பதாக படம் புரொமோஷன் தகவல்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. ரசிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் இது சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. 

Tags

From Around the web