விஜய்யோட ஒன் லாஸ்ட் டான்ஸ்!.. தளபதி கச்சேரி வீடியோ பாடல் ரிலீஸ்!

 
thala

முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கருப்பு படத்தை முந்த முடியவில்லை என்றாலும் 300 கோடி வசூலை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. கேவிஎன் நிறுவனம் வசூல் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவே இல்லை.

அனிருத் இசையில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜுவுடன் விஜய் ஆடிய தளபதி கச்சேரி பாடல் வீடியோவை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ளது.

அந்த ஒன் லாஸ்ட் டான்ஸ் என கடைசி ஒரு நிமிடம் விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் பாடல்களின் இசைக்கு தளபதி விஜய் நடனமாடுவதை பார்த்து தற்போது படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க முடியாத குட்டி, சுட்டீஸ் எல்லாம் தளபதி கச்சேரிக்கு ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். இந்த பாடல் எத்தனை மில்லியன் வியூஸ் சாதனை படைக்கப் போகிறதோ தெரியவில்லை.

Tags

From Around the web