Jananayagan: விஜய்க்கே சம்பள பாக்கி!.. இழுபறியில் பிஸ்னஸ்!... ஜனநாயகன் பரிதாபம்!..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜயின் கடைசி படமாக பார்க்கப்படும் ஜனநாயகன் 2026 பொங்கலை குறிவைத்து ஜனவரி 9ம் தேதி ரிலீசாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேநேரம் இந்த படத்தில் அதிகமான அரசியலும் இல்லை. ஏனெனில் இந்த படம் தெலுங்கில் பாலைய்யா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். எனவே அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த கமர்சியல் மசாலா திரைப்படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளது. அதேநேரம் விஜய் தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்டதால் அரசியல் தொடர்பான சில காட்சிகளையும் இப்படத்தில் வைத்திருக்கிறார்கள்.
ரிலீசுக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை யார் பெறுவது என்பதில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள உரிமையை 115 கோடிக்கு விலை பேசி சில கோடிகளை அட்வான்ஸாகவும் கொடுத்திருக்கிறார். ஆனால் மீதி பணம் கொடுக்காததால் வேறு வினியோகஸ்தரிடம் கொடுக்கலாமா என தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறதாம்..

ஏனெனில் இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு 235 கோடி சம்பளம் பேசி அதில் 150 கோடியை கொடுத்து விட்டார்கள். விஜய்க்கு இன்னும் 85 கோடி சம்பள பாக்கி இருக்கிறதாம். இதனால் இன்னமும் படத்திற்கு டப்பிங் பேசாமல் இருக்கிறார் விஜய். தமிழக வெளியீட்டு உரிமையை விற்ற பணத்தில்தான் விஜயின் சம்பளம் பாக்கியை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது ஆனால் இன்னமும் அந்த பணம் தயாரிப்பாளர் கைக்கு வராமல் இருக்கிறது.
ரோமியோ பிச்சர்ஸ் ராகுலுக்கு வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய பணம் வரவில்லை என்கிறார்கள். இதை தெரிந்து கொண்டு வேறு சில விநியோகஸ்தர்களும் ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை வாங்க போட்டி போட்டு வருகிறார்கள். விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
