வெளியான கொஞ்சம் நேரத்தில் சாதனை படைத்த ‘தளபதி கச்சேரி’! மாஸ் காட்டும் ஜனநாயகன்
நேற்று விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகி சோசியல் மீடியாக்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜன நாயகன். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க நேற்று தளபதி கச்சேரி என தொடங்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியான 15 மணி நேரத்தில் 7.7. மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இதன் மூலம் யூடியூப் இந்தியாவின் இசை தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பெற்றும் சாதனை படைத்திருக்கிறது. இந்தப் பாடலில் விஜயின் நடனம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அவரது குரலில் வெளியாகும் கடைசி பாடல் என்பதாலும் ஓவர் நைட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை இந்தப் பாடல் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இன்னொரு பக்கம் முழு நேர அரசியல்வாதியாகவும் விஜய் மாறிவிட்டார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. தவெக என்ற பெயரில் எப்போது ஒரு கட்சியை உருவாக்கினாரோ அப்பொழுதிலிருந்தே விஜய் அரசியலை சரளமாக பேச ஆரம்பித்துவிட்டார். அதனால் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியல் சம்பந்தமாக ஏதேனும் பேசுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சினிமா மேடை வேறு, அரசியல் மேடை வேறு என்பதை விஜய் இப்போது சரியாக புரிந்து கொண்டிருப்பார். அதனால் சினிமா மேடையில் கண்டிப்பாக அரசியல் பேசமாட்டார் என்றும் இன்னொர் பக்கம் கூறப்படுகிறது. இந்த பாடலை பொறுத்தவரைக்கும் விஜயுடன் பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இது ஒரு ஃபேர்வெல் பாடலாக விஜய்க்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்தப் பாடல் ஒரு பக்கா செலிபிரேஷனாகவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
