ஜான்வி கபூர் - ஸ்ரீலீலா கூட்டணி.. உருவாகிறது புதிய ரொமாண்டிக் த்ரில்லர்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா
 
janvi kappoor

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் பார்க்க ரசிகர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை  பகீரா  படத்தின் இயக்குநர் உமேஷ் பிஸ்ட் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து படங்களை தயாரித்து வரும் ஏக்தா கபூர் மற்றும் குனீத் மோங்கா கபூர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் கதைக்களம்  ஒரே ஆணின் மீது இரண்டு பெண்கள் தீவிரமாக ஈர்க்கப்படுவதை மையமாக வைத்து இந்த ரொமாண்டிக் த்ரில்லர் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் அந்த இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சாதாரண காதல் கதையாக இல்லாமல்,  எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி - ஸ்ரீலீலாவுக்கு முக்கியமான படம்

From Around the web