×

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஜப்பானின் மருந்து – சீனா அறிவிப்பு !

கொரோனா வைரஸ் பாதிப்பை ஜப்பானின் Favipiravir என்ற மருந்து பெரியளவில் கட்டுப்படுத்துவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பை ஜப்பானின் Favipiravir என்ற மருந்து பெரியளவில் கட்டுப்படுத்துவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் இன்று உலகளவில் 2,20,000 பேரை பாதித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 9000 ஐ நெருங்கியுள்ளது. சீன அரசு இப்போது கொரோனா வைரஸ் பரவலை பெருமளவு தடுத்துவிட்டது.

இந்நிலையில் சீன அரசு அறிவித்த அறிவிப்பில் ஜப்பானின் புஜுபுல்ம் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள Favipiravir என்ற மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள உதவுவதாக அறிவித்துள்ளது. இந்த மருந்து எடுத்துக்கொண்ட 340 பேர் முழுவதும் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்துகளை சாப்பிட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News