விஜய் மகனின் ’சிக்மா’ சீக்கிரமே சிங்கம் களமிறங்குது!.. ரிலீஸ் டேட்டை லாக் பண்ணிட்டாங்க!..

 
sigma

லைகா நிருவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சிக்மா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘லோன் வுல்ஃப்’ என்ற அதிரடி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன் மற்றும் யோக் ஜபே உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

sandeep

இதனுடன், கேத்ரீன் தெரெசா இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக ஒரு நடனக் காட்சியில் அவர் தோன்றுவதாக கூறப்படுவதால், அந்த காட்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை சுபாஷ்கரண் தயாரித்துள்ள நிலையில், இசையை தமன் அமைத்துள்ளார். அதிரடி மற்றும் மாஸ் நிறைந்த ஆக்‌ஷன் படமாக ‘சிக்மா’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘சிக்மா’ திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் என்பதாலும், சிக்மா படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web