வெளியானது சிக்மா ஸ்டைல் பாடல்..ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சுவார் போல
வெளியானது சிக்மா ஸ்டைல் பாடல்..ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சுவார் போல
Jun 4, 2026, 20:36 IST
தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படம் சிக்மா. லைக்கா புரொடக்சன் மற்றும் சஞ்சயின் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சுதீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படம் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது. ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சிக்மா படத்தின் ஸ்டைல் பாடம் இன்று வெளியானது. இந்த பாடலில் சுதீப் கிஷனுடன் சஞ்சயும் இணைந்து நடித்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் என்பதால் சிக்மா படத்தின் மீது ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையும் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல், சஞ்சய் ஒரு ஸ்டைலான மேக்கிங்கில் உருவாக்கியுள்ளார்.
