Jason: இந்த 2 விஷயத்தையும் பண்ணவே கூடாது!.. ஜேசன் சஞ்சய் எடுத்த முடிவு!...
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். பார்ப்பதற்கு ஹீரோ மெட்டீரியலாக இருப்பதால் இவரை நடிக்க வைக்க நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், சுதாகொங்கரா போன்ற பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் ஜேசன் ‘எனக்கு விருப்பமில்லை’ என சொல்லிவிட்டார். அதோடு, சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஜேசன் நண்பர்களோடு சேர்ந்து குறும்படங்களையும் இயக்கினார்.
லண்டனில் இயக்கம் பற்றிய படிப்பையும் முடித்தார். ஜேசனின் தாத்தா அதாவது விஜயின் மனைவியின் சங்கீதாவின் அப்பாவும் லைக்கா சுபாஷ்கரனும் நண்பர்கள் என்பதால் ஜேசன் இயக்கவுள்ள படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன் வந்தது. படப்பிடிப்பு துவங்குவதில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

சிக்மா என்கிற இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசரும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இந்த பட ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தை கமிட் செய்துவிடு. அதோடு, இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பதிலும் கவனம் செலுத்து என ஜேசனின் நண்பர் வட்டாரம் அவரிடம் சொல்லியிருக்கிறது.
ஆனால், ஜேசன் சஞ்சயை பொறுத்தவரை இப்போதைக்கு நடிப்பு என்பது கிடையாது. அதோடு, சிக்மா படம் வெளியான பின்னரே அடுத்த படத்தை கமிட் செய்வது என முடிவெடுத்திருக்கிறாராம். ஜேசன் சஞ்சய் விஜயை போலவே இருக்கிறார். விஜயை போலவே அவர் ரியாக்ட் செய்யும் வீடியோ கூட சில நாட்களுக்கு முன்பு வெளியானது. எனவே, எதிர்காலத்தில் ஜேசனை நடிகர், இயக்குனர் என இரண்டிலும் பார்க்கலாம்.
