வெளியில் இருந்து வருபவர்களால் எதுவும் செய்ய முடியாது..சஞ்சய்க்கு திவ்யா சத்யராஜ் வாழ்த்து

ஜேசன் சஞ்சய்யின் சமீபத்திய பேட்டிகளை பாராட்டிய திவ்யா சத்யராஜ், அவரது ‘சிக்மா’ படம் மிகப்பெரிய வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் சிக்மா. லைக்கா புரொடெக்சன் தயாரிப்பில் தமன் எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் சுதீஷ் கிசன் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சிக்மா படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இயக்குனரான சஞ்சய் பல சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவர் அளிக்கும் பேட்டி பலரும் ரசிக்கும்படி உள்ளது. பல கேள்விகளுக்கு யதார்தமாக பதிலளித்து வருவது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ் , ஜேசன் சஞ்சய்க்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய திவ்யா சத்யராஜ், ஜேசன் சஞ்சய்யின் சமீபத்திய பேட்டிகளை பார்த்தேன். அவர் மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் எதார்த்தமாகவும் தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார். அவருடைய இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு அழகான, பலமான குடும்பத்தை வெளியில் இருந்து வரும் நபர்களால் ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுடைய சிக்மா படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே விஜய் திரிஷா நட்பு குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திவ்யா கூறியுள்ள இந்த கருத்து யாரை குறிப்பிட்டு கூறுகிறார் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை சமூகவலைதளத்தில் கூறி வருகின்றனர்.

Tags

From Around the web