துருவ் விக்ரமுக்கு சொன்ன கதையில் ஜேசன் சஞ்சய்?.. இயக்குனர் யார் தெரியுமா?..
முன்னாள் நடிகர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்து நடனமும் ஆடியிருந்தார்.
எனவே எதிர்காலத்தில் அப்பாவைப் போல ஜேசன் ஒரு நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவரோ இயக்கம்தான் எனது விருப்பம் எனகூறி வெளிநாட்டில் திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்புகளை படித்துவிட்டு லைக்கா தயாரிப்பில் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கினார். விஜயின் மகன் இயக்குனர் என்பதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின் சிக்மா படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே சிக்மா திரைப்படம் தோல்வியடைந்தது..
தற்போது ஜேசன் மீண்டும் இயக்குனராக முடியாத நிலை இருப்பதால் கண்டிப்பாக அவர் யாரேனும் ஒரு இயக்குனரின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஜேசன் சஞ்சய் நடிக்கவுள்ள புதிய படத்தை லைக்கா நிறுவனமே தயாரிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
டாடா திரைப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபு சில வருடங்களுக்கு முன்பு லைக்காவிடம் இசை தொடர்பான ஒரு கதையை சொல்லியிருக்கிறார். மேலும், விக்ரமின் மகன் துருவை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அது டேக்ஆப் ஆகவில்லை. தற்போது அந்த கதையில் ஜேசன் சஞ்சயை நடிக்க வைக்கலாம் என்கிற எண்ணம் லைக்கா நிறுவனத்திற்கு வந்துள்ளதாம். அந்த கதை ஜேசன் சஞ்சய்க்கும் பிடித்துப் போனால் அதுவே அவர் நடிக்கும் புதிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
