விஜய் பத்தி கேட்பாங்களே!.. சிக்மா புரமோஷனில் கலந்துகொள்வாரா ஜேசன் சஞ்சய்?..
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் விஜய். தற்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். விஜய்க்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உண்டு. கடந்த சில வருடங்களாகவே விஜய் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி சங்கீதா லண்டனிலும் மகள் திவ்யா சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியிலும் தங்கியிருக்கிறார்.
ஜேசன் சஞ்சயும் தனியாக தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதோடு விஜய்க்கு நடிகை ஒருவரிடம் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூலை 31ம் தேதி வெளியாகவிருக்கிறது.
ஒரு புதிய படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் கண்டிப்பாக அப்புறம் தொடர்பாக நிறைய புரமோஷன்களை செய்ய வேண்டும். படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கவேண்டு. அப்போது செய்தியாளர்கள் ஏடாகூடமாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் ஜேசன் சஞ்சய் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டால் செய்தியாளர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக அவரின் அப்பா விஜயை பற்றி கேள்வி கேட்பார்கள். இது கண்டிப்பாக அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே இதை எப்படி சமாளிப்பது என ஜேசன் சஞ்சய் தீவிரமாக யோசித்து வருகிறாராம். அல்லது புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையே தவிர்த்து விடலாமா எனவும் அவர் யோசித்து வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
