'சிக்மா' ஹீரோ சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சூப்பர் சுப்பு' வெப் சீரிஸை பார்த்த ஜேசன் சஞ்சய்... என்ன சொன்னார் தெரியுமா?
நெட்ஃபிளிக்ஸில் சந்தீப் கிஷன் நடிப்பில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் தான் 'சூப்பர் சுப்பு'.
காமெடி டிராமா ஜானர் வெப் சீரிஸான இதை இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ளார். இதில் மொத்தம் 7 எபிசோடுகள் இருக்கிறது.
சந்தீப் கிஷனுடன் இணைந்து மிதிலா பால்கர், முரளி ஷர்மா, மானசா சௌத்ரி, பிரம்மானந்தம், ஜீவன், திவ்யா பிள்ளை, சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
Just watched Super Subbu.
— Jason Sanjay Official (@official_jsj) July 6, 2026
My heartfelt wishes and congratulations to @sundeepkishan bro and the entire cast and crew.✨ 🤩 Thoroughly enjoyed the show….must mention each and everyone’s performances as well as it’s loyalty toward it’s genre.
Don’t miss it guys!!#supersubbu…
தற்போது, இவ்வெப் சீரிஸை தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில் சந்தீப் கிஷனுடன் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றியுள்ள டெக்னீஷியன்கள் அனைவரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள 'சிக்மா' படத்தை வருகிற ஜூலை 31-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

