சீக்கிரமே ஓடிடிக்கு ஓடிவந்த சிக்மா!.. சிஎம் பையன் படத்தை பார்க்க ரெடியா?..

 
sigma

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் தற்போது ஓடிடியில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ பண்டிட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் மற்றும் கொள்ளையை மையமாகக் கொண்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், பெரிய அளவில் வசூலிக்கவில்லை. முதல் நாளில் இந்தியாவில் ரூ.2.35 கோடி வசூல் செய்ததாகவும், மொத்தமாக ரூ.8.23 கோடி  வசூலைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால் வெளியீட்டுக்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிக்மா, தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Tags

From Around the web