சூரி வீட்டுத் திருமணத்தில் ஜேசன் சஞ்சய்க்கு ராஜ மரியாதை!.. என்ன விசேஷம்?..
நடிகர் சூரியின் அண்ணன் மகனின் திருமண விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜேசன் சஞ்சய், சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்ரும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூரி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதனால் தற்போது சூரியின் குடும்பத் திருமணத்தில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார்.
Video | Jason Sanjay at Soori family wedding ceremony.💥 https://t.co/Z9MAYFMTJt
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 13, 2026
நடிகர் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், விழாவில் கலந்துகொண்ட மற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜேசன் சஞ்சய் அடுத்து சூரியை வைத்து படம் இயக்கப் போகிறாரா? அல்லது ஹீரோவாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகளும் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன.
