உஷாரான பார்ட்டிதான்.. அப்பாவை மிஞ்சிய பிள்ளையா இருப்பாரு போல ஜேசன் சஞ்சய்

சமீபகாலமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப்பாகி விட்டதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கின்றது. அதைப் பற்றிய ஒரு தகவல் தான் இப்போது வைரலாகி வருகின்றது. கனடாவில் சினிமா பற்றிய படிப்பை முடித்த கையோடு ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் சென்னைக்கு வந்தார் ஜேசன் சஞ்சய். முதலாக குறும்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார் .
அதன் பிறகு சென்னை வந்ததும் முதல் வேலையாக லைக்காவுடன் புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அது சம்பந்தமான புகைப்படம் வெளியானதுமே இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெரிய நடிகரின் மகன் முதல் படமே பெரிய நிறுவனத்துடன் என பல சர்ச்சைகள் கிளம்பின. இது விஜயின் சிபாரிஸாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் விஜய் எக்காரணத்தைக் கொண்டும் தன் மகனுக்காக சிபாரிசு செய்ய மாட்டார் என்றும் விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இன்னொரு பக்கம் விஜயின் மனைவி சங்கீதா லண்டனில் இருப்பதால் சங்கீதாவின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர். அவருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்கனவே ஒரு நல்ல நட்பு இருப்பதாகவும் அதன் காரணமாக கூட ஜேசன் சஞ்சய்க்கு இந்த பட வாய்ப்பு வந்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
இப்படி பெரிய பூகம்பத்தையே கிளப்பிய அந்த புகைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியும் நிலையிலும் இன்னும் இந்தப் படம் முடிந்த பாடு இல்லை. இப்பொழுது தான் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது. மூன்று நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடந்தது. அதோடு இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக திடீரென ஒரு செய்தி கிளம்பியது. ஆனால் ஜேசன் சஞ்சயை பொறுத்த வரைக்கும் முதல் கட்ட படப்பிடிப்பை அந்த மூன்று நாட்களில் முடித்து விட வேண்டும் என்று எண்ணினாராம் .
இரண்டாம் கட்ட படப்பிடிப்பை யாழ்ப்பாணம் ஏரியா பக்கம் நடத்துவதாக திட்டமிட்டு இருந்தாராம். இதில் அனைவரும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் இந்த படத்தை ஜேசன் சஞ்சய் பர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தான் பண்ணுகிறாராம். அதற்காக 25 கோடி ரூபாயை முன்னதாகவே படத்திற்காக வாங்கி விட்டாராம் ஜேசன் சஞ்சய். இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் கூறும் பொழுது விஜயின் மகன் ரொம்பவும் உஷாராக தான் இருக்கிறார் என சொல்கிறார்கள்.
ஆனால் பர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் பண்ணும் பொழுது இவருக்கு இது முதல் படம் .புரொடக்ஷன் சம்பந்தமாக இவருக்கு என அதில் அனுபவம் மிக்க நபர்கள் இருக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி இருப்பதாக தெரியவில்லை. எப்படி ஃபர்ஸ்ட் காப்பி என்ற அடிப்படையில் இந்த படத்தை பண்ணுகிறார் என ஆச்சரியத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.