தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே OTTயில் தவறுதலாக வெளியான Mutiny!
Aug 20, 2026, 17:16 IST
ஹாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் ஜேசன் ஸ்டேதம். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'மியூட்டினி' (Mutiny).
ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதை இயக்குநர் ஜீன்-ஃபிரான்சுவா ரிஷே இயக்கியுள்ளார். ஆல்ரெடி வெளியான இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) தான் திரையரங்குகளில் உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள்.

இதற்கிடையில் பிரபல OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று (ஆகஸ்ட் 19-ஆம் தேதி) இந்த படத்தை தவறுதலாக அப்லோட் பண்ணி விட்டார்கள். பின், ஒரு மணி நேரத்துக்கு பிறகே அதை நீக்கியுள்ளனர்.