உப்பன்னா ரீமேக்கில் விஜய் மகன்... விஜய் சேதுபதியின் பக்கா பிளான்

அறிமுக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தின் தெலுங்கின் முன்னணி ஹீரோவான சாய்சரண் தேஜாவின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் - கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்த படம் உப்பன்னா. ஜாதி கடந்த காதலைப் பேசிய இந்தப் படத்தில் ஹீரோயினின் தந்தையாக நெகட்டிவ் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
படம் கடந்த வாரம் வெளியாகி டோலிவுட் வசூலில் வேறலெவல் சாதனை படைத்து வருகிறது. இந்தநிலையில், படத்தின் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின்போது இதுகுறித்து விஜய்யிடமும் விஜய் சேதுபதி பேசியதாகத் தெரிகிறது. அதனால், உப்பன்னா தமிழ் ரீமேக் மூலம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகப்படுத்த விஜய் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் இயக்கிய புஜ்ஜி பாபு சனாவே தமிழிலும் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.