Categories: Cinema News latest news throwback stories

“வருங்கால முதல்வர் ராமராஜன்??”… உஷார் ஆன ஜெயலலிதா… புரட்சி தலைவி எடுத்த அதிரடி ஆக்சன்!!

1980களில் ரஜினி-கமல் ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிப்போட்டு ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் சைலண்ட்டாக வந்து மக்களின் மனதில் பட்டறையை போட்டவர் ராமராஜன். “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “எங்க ஊரு காவல்காரன்”, “நம்ம ஊரு நாயகன்” என பல கிராமத்து திரைப்படங்களின் மூலம் கிராமத்து நாயகனாகவே ரசிகர்களிடம் வலம் வந்தார்.

Ramarajan

ராமராஜன் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரிய நடிகராக ராமராஜன் திகழ்ந்து வந்தார்.

இந்த தருணத்தில் ராமராஜன் நடித்து பிளாக்பஸ்டர் ஆன “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. அப்போது அந்த விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் ராமராஜனின் ரசிகர்கள் பலரும் வருங்கால முதல்வர் ராமராஜன்தான் என பேசத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் ஜெயலலிதா அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Jayalalithaa

இதனிடையே “கரகாட்டகாரன்” வெள்ளி விழாவை முன்னிட்டு மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. அதாவது “கரகாட்டக்காரன்” வெள்ளிவிழாவில் ஜெயலலிதா கலந்துகொள்ள உள்ளார் என்பதனை விளம்பரப்படுத்துவதற்கு செய்திதாள்களில் போஸ்டர்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அந்த போஸ்டரில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு இணையான உயரத்தில் ராமராஜனின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததாம்.

அந்த போஸ்டரை காண்பித்து ஒப்புதல் வாங்குவதற்காக பயில்வான் ரங்கநாதன் ஜெயலலிதாவை பார்க்க சென்றாராம். அப்போது ஜெயலலிதா அந்த போஸ்டருக்கு ஒப்புதல் வழங்கவில்லையாம். அதன் பின் வேறு ஒரு போஸ்டர் உருவாக்கப்பட்டதாம். அதில் ஜெயலலிதா உருவத்திற்கு கீழே மிகவும் சிறியதாக ராமராஜனின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அதன் பின்தான் ஜெயலலிதா அந்த போஸ்டருக்கு ஒப்புதல் தந்தாராம். எனினும் அவர் “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் வெள்ளிவிழாவில் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிங்க: “டான் படம் பார்த்து சிரிப்பே வரல”… ப்ளு சட்டை மாறனாக மாறிய உதயநிதி… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!

Ramarajan

இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் “ராமராஜனின் வளர்ச்சியை பார்த்த ஜெயலலிதா, அவரை ஒதுக்க முடிவெடுத்தார். ராமராஜன் நம்மை விட பெரிய ஆளாக வளர்ந்துவிடுவாரோ என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருந்தது” என தனது வீடியோ ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad
Published by
Arun Prasad