Connect with us
Jayalalitha

Cinema News

“அவருக்கு ஆர்வம் பத்தல”… பிரபல நடிகரை ஓப்பனாக விமர்சித்த ஜெயலலிதா… கெத்துதான் போங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, தனது பல திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம்  ரசிகர்களை கவர்ந்தவர். சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் தைரியமாக கர்ஜிக்கும் சிங்கப்பெண்ணாகவே திகழ்ந்தார். ஆதலால்தான் ஆண்மையவாத அரசியலில் கூட ஒரு பெண்ணாக அவரால் மக்களின் மனதில் நிலைத்து நிற்கமுடிந்தது.

மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர் ஜெயலலிதா. அப்படி அவர் ஒரு பிரபல நடிகரை பற்றி மிகவும் வெளிப்படையாக விமர்சனம் வைத்த தகவல் ஒன்றை இப்போது பார்க்கலாம்.

Jayalalitha

Jayalalitha

ஜெயலலிதா சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு பத்திரிக்கை நிருபர் “உங்களுடன் பல திரைப்படங்களில் நடித்த ரவிச்சந்திரனை குறித்து உங்களது அபிப்ராயம் என்ன?” என கேட்டார்.

இது போன்ற கேள்வி கேட்கப்படும்போது, பல நடிகர் நடிகைகள் மிகவும் வெளிப்படையாக பதில் கூறுவதற்கு தயங்குவார்கள். ஆனால் ஜெயலலிதா இந்த கேள்விக்கு கூறிய பதில் என்ன தெரியுமா?

Ravichandran

Ravichandran

“ஒரு கதாநாயகனுக்கான தோற்றம், நடனம் எல்லாம் சிறப்பாக அமையப்பெற்றவர் ரவிச்சந்திரன். அவர் என்னுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் முதல் திரைப்படத்தில் அவர் நடிக்கும்போது இருந்த ஆர்வத்தை பின்னாள் வந்த எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை. அந்த ஆர்வம் மட்டும் அப்படியே இருந்திருந்தால், ரவிச்சந்திரன் இன்னும் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பார்” என தனது கருத்தை மிகவும் வெளிப்படையாக கூறினாராம்.

Jayalalaitha

Jayalalaitha

பொதுவாக சக நடிகரை குறித்து இவ்வாறு மனம் திறந்து பேசமாட்டார்கள். அதுவும் அந்த காலத்தில் ரவிச்சந்திரன் மிகவும் பிகழ்பெற்ற நடிகராக விளங்கினார். ஆனால் ஜெயலலிதா இது குறித்தெல்லாம் தயக்கம் கொள்ளவில்லை. இது போன்ற தைரியமான செயல்கள்தான் அவரை ஒரு சிங்கப்பெண்ணாக வரலாறு உருவாக்கியிருக்கிறது என்று கூறினால்கூட அது மிகையாகாது.

Continue Reading

More in Cinema News

To Top