Connect with us

Cinema News

MGR இறுதிச்சடங்கு வண்டியில் ஜெயலலிதா ஏறியிருக்கக்கூடாது… அன்று நடந்தது இதுதான்!

இரும்பு பெண்மணியாக தமிழக மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. தமிழக முதல்வர் , அரசியல் தலைவர் , திரைப்பட நடிகை என பன்முகம் கொண்டு பிரபலமானவர் ஜெயலலிதா. தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

mgr

அப்போது தான் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தார். அரசியலில் எம்ஜிஆர் உடனே பயணித்து வந்த ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர். தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா பல சாதனைகள் படைத்தார்.

mgr

அரசியல் , சினிமா என இரண்டிலும் தனக்கு ஆண் துணையாக இருந்தவர் எம்ஜி ஆர் தான். அவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்த கட்சிக்கு வாரிசாக இருந்து மறைந்துவிட்டார்.

jeyalalitha

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் மீது இருந்த நெருக்கமான உறவு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் ‘எம்ஜிஆர் இருந்தவரைக்கும் இருந்த ஜெயலலிதா வேறு, எம்ஜிஆர் மறைந்த பிறகு இருந்த ஜெயலலிதா வேறு. அவர் இருக்கும்போது எம்.ஜி.ஆருக்கு அடிமையாகவே இருந்து காலத்தை கழித்தார். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவர் பட்ட அவமானங்களை தன் கட்சியினரிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தார். எம்ஜிஆர் இறுதிச்சடங்கு வண்டியில் ஜெயலலிதா ஏன் ஏறணும்?. அது அவசியமே இல்லை. ஜானகி அம்மாவே ஏறவில்லை.அந்தம்மா ஏறினதும் அங்கிருந்த நாலு பேரு இழுத்து தள்ளினாங்க! அத செய்தியா பரப்பி பெண்கள் மத்தியில் அனுதாபத்தை தேடிக்கொண்டார்’ என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top