×

ஜெயலலிதாவின் வேதா இல்லம் தமிழக அரசுக்கு சொந்தமானது! அதிரடி சட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அந்த இல்லம் அவரது தாயார் பெயரால் வேதா இல்லம் என அழைக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அந்த இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களான தீபா மற்றும் தீபக் ஆகியோர் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டதுஇதையடுத்து தமிழக அரசு ரூபாய் 68 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த இல்லத்தின் தனி உரிமையாளராக மாறியுள்ளது. ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ.36 கோடி மற்றும் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக ரூ.32 கோடி என மொத்தம் ரூ.68 கோடி ரூபாய் ஆகியவற்றுக்காக இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News