விஜயகாந்த் மகனுடன் மோதும் மோகன் ராஜா
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன்
Jul 28, 2026, 14:40 IST
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் அடுத்து நடிக்க உள்ள படம் வான வேடிக்கை. கேப்டன் சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய திரு இப்படத்தினை இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக சிவானி ராஜசேகர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் வான வேடிக்கை படத்தில் நெகட்டிவ் ரோலில் அதாவது சண்முக பாண்டியனுடன் மோதும் வில்லன் கேரக்டரில் நடிக்க இயக்குனர் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயல்பிலேயே மிகவும் அமைதியான கேரக்டரான ராஜா இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகக் இருப்பதை சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
