கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்துக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வெளியானாலே திருவிழா போல கொண்டாடும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிப்பில் இறுதியாக வலிமை படம் வெளியான நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க நடிகர் ஒருவர் டிப்ஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.
அதாவது நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பேராண்மை படம் வெளியான சமயத்தில் நடிகர் அஜித் உடலில் ஆபரேஷன் செய்திருந்தாராம். எனவே அதிகமாக மருந்துகளை எடுத்து கொண்டதால் உடல் எடை அதிகரித்துள்ளது.
அப்போதுதான் அஜித் பேராண்மை படத்தை பார்த்துள்ளார். அதில் ஜெயம் ரவி என்சிசி மாஸ்டராக உடலை ஃபிட்டாக வைத்திருந்ததால் அவரை அழைத்த அஜித் எப்படி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள்? என கேட்டாராம்.
இதனையடுத்து அஜித்துக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்ட அட்வைஸ்களையும், டிப்ஸ்களையும் ஜெயம் ரவி கூற அதை நடிகர் அஜித் பின்பற்றி உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…