தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து, அதில் தன்னை பொருத்திக்கொண்டு நல்ல வெற்றியை கொடுத்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. படங்களின் வசூல் வரவேற்பு சில நேரம் காலை வாரினாலும், இப்படியே கதைங்களங்களை வைத்து தப்பித்து கொள்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
இவர் அடுத்ததாக அகிலன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். துறைமுகம் சம்பந்தப்பட்ட இந்த கதைக்களத்தில் இரட்டை வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்பட ஷூட்டிங் தூத்துக்குடியில் நடைபெற்றது. இப்படத்தை பூலோகம் பட இயக்குனர் கல்யாண் இயக்கி வருகிறார்.
இப்படத்தை அடுத்து, காமெடி படங்களில் தன்னுடைய ட்ரேட் மார்க் முத்திரையை பதித்த இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். அதே போல இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். மேலும், இந்த படத்திற்க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளாராம்.
இதையும் படியுங்களேன் – அந்த படம் எடுத்ததுக்கு பதிலா நான் 4 படம் எடுத்திருப்பேன்.! லோகேஷ் கனகராஜ் காட்டம்.!
இயக்குனர் ராஜேஷ் கடைசியாக இயக்கிய சில திரைப்படங்கள் போதிய வரவேற்பப்பை பெறவில்லை என்பதே உண்மை. அதே போல, முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்திக்கு சமீப காலமாக பெரிய வெற்றி எதுவும் இல்லை. அதே போல, ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது பெரிய படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை. மூவரது மார்க்கெட்டும் சரிந்துள்ள நிலையில் தான் ஜெயம் ரவி மூவருக்கும் வாய்ப்பளித்துள்ளார் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
எது எப்படியோ ஜெயம் ரவியும் பெரிய ஹிட்டுக்காக காத்திருக்கார் என்பதே உண்மை. அவரது அடுத்தடுத்த அகிலன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெற்றியடைந்தால் மீண்டும் ஜெயம் ரவி முன்னணி ஹீரோ வரிசையில் இணைவார் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…